Thursday, August 20, 2009

நெய்வேலி வடக்கு - பாபு நடேசன்

நெய்வேலி வடக்கு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் ஒன்றியத்தில் நெய்வேலி வடக்கு அமைந்துள்ளது. நெய்வேலியில் இரண்டு பகுதி உள்ளது

1. நெய்வேலி வடக்கு
2. நெய்வேலி தெற்கு

நெய்வேலி - பெயர் கரணம் இதுவரை எனக்கு தெரியவில்லை மன்னிக்கவும் யாரிடம் கேட்டலும் தெரியாது என்பது தான் பதில்.

எனது ஊரின் சிறப்பு:
முப்புரங்களிலும் குளங்களாலும் ஒருபுறம் ஆற்றங்கரையாலும் பச்சை நிறம் சூழ பரந்த நிலப்பரப்பில் இருக்கிறது

எங்கள் ஊரில் தெற்கே அய்யனார் காவலில் உள்ளார். மக்களிடம் எந்த தீய சக்தியையும் நெருங்கவிடாமல் தெற்கில் இருந்து நாலாபுறமும் காவல் இருக்கிறார். ஊரின் மேற்கே ஊரின் மேற்க்கோடியில் பெரிய அய்யனார் கோவில் அமைந்து மக்களுக்கு பக்கபலமாக உள்ளார்.

அதன் அருகில் கறுப்பர் கோவில் உள்ளது. நான்கு புறங்களிலும் பனை மரநிழலில் குதிரைகாவளுடன் மக்களை காத்து அருள் புரிகிறார்....!

ஊரின் வடபகுதிக்கு முன்னால் தோட்டத்து முனி காவல் தருகிறார்....! ஊரின் மேற்கு கோடியில் மருதப்ப கோவில் உள்ளது இது மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்று. இன்னும் நிறைய கோவில்கள் இருக்கிறது

ஆனால் அதனை பற்றி நிறைய விஷயங்கள் எனக்கு தெரியாததனால் தெரிந்த பிறகு சொல்கிறேன்

எங்கள் ஊரில் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்
இங்கு நெல், சோளம் கரும்பு, உளுந்து, கேழ்வரகு, கடலை, தென்னை, தைலமரம் (eucalyptus} எள், சவுக்கு, இப்போது மருந்துக்கு பயன்படும் வெள்ளரி அதிகமாக பயிரிடுகிறார்கள், வருடத்தின் அனைத்து மாதங்களிலும் எங்கள் ஊரில் விவசாயம் சிறப்பாக செய்து வருகிறார்கள்

இங்கு சில ஜாதி வேறுபாடுகள் இருந்தாலும் மதவெறி கிடையாது,

ஒரு மேல்நிலை பள்ளியும் மூன்றுக்கு மேற்ப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளும், ஐந்துக்கு மேற்ப்பட்ட நடுநிலைப்பள்ளிகளும், 15 மேற்ப்பட்ட தொடக்கப்பள்ளிகளும் உள்ளன

தொடக்கப்பள்ளிகளில் மிகக்குறைந்த மாணவ மாணவிகளே பயின்று வருகிறார்கள், காரணம் ஆங்கில பள்ளிகளின் வருகை அதிகரிப்பாலும், பெறோர்களின் ஆங்கில மோகத்தினாலும். மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களின் கடின உழைப்பால் மாணவர்கள் தனியார் பள்ளிகளை விட அதிகமாக மதிப்பெண் பெறுகிறார்கள்.

மக்களிடம் இன்னும் ஜாதி என்னும் அகம் இன்னும் என் ஊரில் காணப்படுகிறது. நிறைய பேர் இன்னும் படித்த முட்டாள்களாகவே இருக்கிறார்கள்
என்னதான் இளநிலை, முதுநிலை பட்டங்கள் பெற்றாலும் ஜாதி வெறியை விட்டு வெளிவரவில்லை ( படிக்காதவர்களைவிட படித்தவர்களுக்கு புரிந்துகொள்ளும் தன்மை இல்லை என்றே கூறலாம்.) என்று தான் சொல்வேன்.

இருப்பினும் மாறும் எனும் மனம் எனக்குள் இருக்கிறது ( சொல்லப்போனால் இப்போது நிலைமை நன்றாக இருக்கிறது, அதிகம் படித்தவர்கள் இருப்பதினால் ).

இந்த அவசர உலகில் மக்கள் பாசத்துடனும் அமைதியுடனும் வாழ்ந்துவருகிறார்கள்.
பாசப்பிணைப்பில் பயிரிடப்பட்ட மக்களால் எந்தவித அச்சுறுத்தல்களும் இந்நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் வராது என் உறுதிகூறுகிறேன்.

அரசியலில் ஆனந்தப்படும் அரசியல்வாதிகள் ஆதிக்கம் நிறைந்த ஊர் என்றே சொல்லலாம். பெண்களை குறைவாக படிக்க வைக்கும் பழக்கம் உள்ளவர்கள். பெண் படித்து என்ன செய்யப்போகிறாள் என்ற எண்ணம்.

நூறில் பத்து சதவிகிதம் பேர் தான் பெண்களை கல்லூரிவரை அனுப்புகிறார்கள்.
அவர்களை காணும்போதெல்லாம் பாராட்டுவேன், படிக்கவையுங்கள் என்று மன்றாடுவேன். ஒரு பெண் படித்துவிட்டால் அந்த குடும்பமே படித்தது மாதிரி என்று எடுத்து இயம்பி இருக்கிறேன் .

சரியான வழிகாட்டுதலுக்கு யாரும் வராதது தான் பெண்களின் கல்விதரம் குறைய காரணம் என சொல்வேன்


இரண்டு மருத்துவமனைகள் உள்ளது. இதில் தற்ப்போது 24 மணிநேரமும் மகப்பேறுக்கு தனி மருத்துவமனையாக ஒன்று செயல்பட்டு வருகிறது.

இன்னும் நிறைய நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது

இன்னும் நிறைய எழுதுவேன்..................!

தவறுகள் எதாவது இருந்தால் சுட்டிக்காட்டுங்க மேலும் சிறப்பாக செய்ய துனைபுரியுங்கள்....

நன்றி.....

என்னிடம் ஒரு சில புகைபடம் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

வாழ்த்துகளுடன்
உங்கள் அன்பு மறவா
பாபு நடேசன்
நெய்வேலி வடக்கு - பள்ளத்தான்மனை