Thursday, March 14, 2019

கல்விச் சீர் திருவிழா 2019 | நெய்வேலி வடபாதி | அரசு நடுநிலைப்பள்ளி

​தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி வடபாதி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச் சீர் பெருவிழா மார்ச் 7 ஆம் தேதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது, பெற்றோர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் சேர்ந்து கல்விச்சீர் பொருள்களை வழங்கினார்கள். 



நெய்வேலி வடபாதி பள்ளத்தான்மனை, நரிப்பத்தை, நாச்சியான் தெரு, கட்டுவான்பிறை சுற்று வட்டார பகுதிகள் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்ப கல்வியை போதிக்கும் அரும்பணியை கடந்த 50 ஆண்டுகளுக்கு செய்துவருகிறது, 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டு சாதாரண ஓட்டுக்கூரை கட்டிடத்தில் செயல்பட்டுவந்த இப்பள்ளி, இப்போது கப்பீரமாக காங்கிரீட் கட்டிடங்களில் செயல்படுகிறது. 


பல அரசுப்பள்ளிகளில் காணப்படும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை இங்கு இல்லை. ஆனாலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான கழிப்பறைகள் போன்ற சிறப்பான முறையில் பள்ளி நடைபெற்று வருகிறது.​​





இங்கு பயின்ற மாணவர்கள்,  இன்று சிறந்த மிக பெரிய வல்லுநர்களாக வளர்ந்து பணியாற்றி வருகிறார்கள். உதாரணமாக, பள்ளி தலைமை ஆசிரியராக, தமிழாசிரியர்களாக, கணிப்பொறி வல்லுனராக, பொறியியலராக, தொழில் அதிபராக, பஞ்சாயத்து துணை தலைவராக, அரசு பேருந்து ஓட்டுநராக, மருத்துவ செவிலியர்களாக, மெக்கானிக், மற்றும் மின்வல்லுநர்களாக பணியாற்றுகிறார்கள்.


அரசு அளிக்கும் அனைத்து இலவச கல்வி உபகரணங்களுடன், திறம்பட கல்வியை போதிப்பது மட்டுமின்றி, தனியார் பள்ளிகளுக்கு இணையான அனைத்து செயல்பாடுகளையும் இப்பள்ளி கொண்டிருக்கிறது. 5 மடிக்கணினிகள்  மற்றும் 3 மேசை கணினிகள் மூலம் கல்வி கற்பிக்கப்படுவதுடன், செஸ் போன்ற விளையாட்டுகளுடன் மாணவர்களுக்கு தேவையான அனைத்தும் கற்று தருக்கிறார்கள்.


கல்வி சீர் திருவிழா:


இந்த விழாவில், இங்கு படிக்கும் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த உதவும் வகையில், பெற்றோர்கள் இணைந்து நோட்டுப் புத்தகங்கள், குடிநீருக்காக மண்குடம், குடிநீர் சுத்திகரிப்பு சாதனம், தரை விரிப்புகள், பாய்கள், கால் மிதிகள், விளையாட்டு சாதனங்கள், நாற்காலிகள், பீரோ, என, ஏராளமான பொருள்களை மேள தாளத்துடன் கொண்டு வந்து சீர்வரிசையாக அளித்தனர். 













பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து ஊர்வலம் நடத்தி, பட்டாடை உடுத்தி மேள தாளங்களுடன் கல்யாண வீட்டு விசேஷம் போல பெற்றோர்கள் நடத்தியது அனைவரையும் கவர்ந்தது. கொண்டு வந்த சீர் வரிசையை பள்ளி தலைமை ஆசிரியாரிடம் வழங்கினர். அரசுப் பள்ளிகளின் மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கையை கூட்டுவதாக இது அமைந்துள்ளது. 






வரவேற்பு:

இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் வரவேற்று பேசினார். மற்ற ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கு.பாண்டியன், துணை தலைவர் ரெ. நடேசன் மற்றும் ஊர் பொது மக்கள், இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியயோர் முன்னிலையில் கல்விசீர் விழா சிறப்பாக நடந்தது. 



தலைமையாசிரியருக்கு (ஆசிரியர் திரு பாஸ்கரன்) பக்கபலமாக இருந்து பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபடும் ஆசிரியை திருமதி புவனேஸ்வரி | திரு விஜயகுமார் | ஆசிரியை திருமதி ஷீலா | ஆசிரியர் திரு வெங்கடேசன் | ஆசிரியர் திரு ராஜேஷ் | ஆசிரியை திருமதி தேவிப்பிரியா இவர்களோடு எங்கள் குழ்நதைகளுக்கு சத்தாண உணவை தினமும் வழங்க தன் சொந்த வயலில் இயற்கை முறையில் பயிடப்பட்ட காய்கறிககளை கொண்டு சத்துணவு  வழங்கும் சத்துணவு அமைப்பாளர் திரு மணிராசு அவர்களும் இக்கல்வி சீர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


எங்கள் பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மேன்மை படுத்தும் ஆசிரிய பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 

ஆக்கமும் தொகுப்பும் 
பாபு நடேசன் 
பள்ளி முன்னாள் மாணவர்
பெங்களூரு | திருச்சி | நெய்வேலி வடபாதி 
9739683023

1 comment: